Gold, Silver Rate Today: சென்னையில் வெள்ளி விலை ரூ62,800; தங்கம் எந்தெந்த நகரங்களில் என்ன ரேட்?
Gold rates today in Delhi, Chennai, Kolkata, Mumbai – 10 July 2022 tamil news: சென்னையில், 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.46,890 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 51,150 –க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Gold, Silver Rates Today News Updates in tamil: தென்னிந்தியாவில் தங்க வர்த்தகம் அதிகளவில் நடைபெறும் இடமாக உள்ள தமிழகத்தில் தலைநகர் சென்னை அதிக தங்கம் வர்த்தம் செய்யும் முக்கிய நகரமாக திகழ்கிறது. பெண்கள் மிகவும் விரும்பு தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக தொடர் ஏற்றத்தை சந்தித்து வருகிறது.
Advertisment
தங்கத்தின் விலை
அந்த வகையில், இன்று, (ஜூலை 10) 2022 தங்கம் விலை இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் தங்கத்தின் விலை நிலையானதாக உள்ளது. இதில் டெல்லியில் இன்று 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 46,950 ஆகவும், 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 51,210 நிர்ணையம் செய்யப்பட்டுள்ளளது.
அதேபோல் தமிழகத்தின் தலைநகரான சென்னையில், 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.46,890 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 51,150 –க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 46,950 ஆகவும், 10 கிராம் 24 காரட் ரூ. 51,210 ஆகவும், மும்பையில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 46,850 மற்றும் ரூ. 24 காரட் 10 கிராம் 51,210-க்கும் விற்பனை செய்யப்டுகிறது.
சென்னையில் நேற்றைய தங்கம் விலை
சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.13 அதிகரித்து ரூ.4,689 ஆகவும், சவரனுக்கு ரூ. 104 அதிகரித்து ரூ. 37, 512-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் 22 காரட் தங்கம் 10 கிராம் விலை ரூ.130 அதிகரித்து ரூ.46,890 ஆகவும், 24 காரட் தங்கம் விலை ரூ.140 அதிகரித்து ரூ.51,150 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலை 5 நாட்கள் உயர்ந்தும் 3 நாட்கள் குறைந்தும் உள்ள நிலையில், 2 நாட்கள் மாற்றம் இல்லாமல் இருந்துள்ளது.
வெள்ளி விலை
ஒரு கிலோ வெள்ளியின் விலை கொல்கத்தா, டெல்லி மற்றும் மும்பையில் ரூ. 57,200 ஆகவும், சென்னையில் ரூ. 62,800 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, வட்டி விகிதங்கள், நகைச் சந்தை,, வர்த்தகப் போர்கள் போன்ற பல காரணங்களால் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதாக புல்லியன் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.