22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக தங்கத்தின் விலை அதிகரித்தே வருகிறது. சில நாட்களுக்கு மட்டும் தங்கத்தின் விலை குறைந்து இருந்தது குறிப்பிடதக்கது,
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரன் ரூ.40 அதிகரித்து ரூ.53,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5 உயர்ந்து ரூ.6,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராம் ரூபாய் 96-00-க்கு விற்பனை செய்யப்பட்டு, ஒரு கிலோ ரூ.96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.