சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.
கடந்த 2 மாதமாக தங்கம் விலை எதிர்பார்க்காத அளவு, உச்சத்தை எட்டியது. இந்நிலையில் கடந்த வாரம் தங்கம் விலை படிப்படியாக குறைந்து ரூ.53,000 ஆக விற்பனை செய்யப்பட்டது.
புதன்கிழமை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.53,560-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.520 உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6,760 ஆகவும் ஒரு சவரன் தங்கம் ரூ,54,080 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.97.50 ஆகவும், ஒரு கிலோ ரூ.97,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.