சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.54,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், நேற்று தங்கம் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,800-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,400-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.54,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.5770-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா உயர்ந்து ரூ.99.00-க்கும், கிலோ ரூ.500 உயர்ந்து ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.