சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ரூ.54,400-க்கு விற்பனையானது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் தங்கத்தின் விலை குறைந்தது. அதன்படி, ஒரு கிராம் ரூ.30 குறைந்து 6,770-க்கும், ஒரு பவுன் ரூ.240 குறைந்து ரூ.54,160-க்கு விற்பனை செய்யபப்டுகிறது.
புதன்கிழமை தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.6,760-க்கும், ஒரு பவுன் ரூ.80 குறைந்து ரூ.54,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை செவ்வாய்க்கிழமை 50 காசு குறைந்து ரூ.99-க்கும் ஒரு கிலோ ரூ.500 குறைந்து ரூ.99,000-க்கு விற்பனையானது. இந்த நிலையில் வெள்ளியின் விலை மாற்றமின்றி தொடர்கிறது.