சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.
சமீபத்தில் மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து, சென்னையில் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிந்து வந்தது.
ஆனால் சில நாட்கள் தங்கம் விலை அதிகரித்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.30 குறைந்து, ரூ.6,385-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.51,080-க்கு விற்பனையாகிறது.
இதுபோல 18 கேரட் தங்கம் விலை 25 ரூபாய் குறைந்து 5,230 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 89 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“