/indian-express-tamil/media/media_files/uhdzGGlQJCPGBtgGN8oL.jpg)
தங்கத்தின் செயல்திறன் இந்த வாரத்தின் பணவீக்கப் புள்ளிவிவரங்களைப் பொறுத்து இருக்கும்.
அரசு கருவூல வருவாய் மந்தம், ஆரம்பகால பெடரல் ரிசர்வ் விகிதக் குறைப்பு பற்றிய குறைவான நம்பிக்கையின் காரணமாக டாலரின் மதிப்பு உயர்த்தப்பட்டது.
இதனால், திங்களன்று (ஜன.8,2024) தங்கத்தின் விலை மூன்று வாரக் குறைந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்தது. இந்த நிலையில், சந்தைகள் இந்த வாரம் அமெரிக்க பணவீக்க தரவுகளை எதிர்நோக்கி உள்ளன
1313 ஜிஎம்டியில் ஸ்பாட் தங்கம் 1.2% குறைந்து அவுன்ஸ் ஒன்றுக்கு $2,020.69 ஆக இருந்தது, இது டிசம்பர் 18க்குப் பிறகு மிகக் குறைந்த அளவில் இருந்தது. அமெரிக்க தங்க எதிர்காலம் 1.1% குறைந்து $2,026.80 ஆக இருந்தது.
மேலும், ஸ்பாட் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 1.2% குறைந்து $22.89 ஆகவும், பிளாட்டினம் 1% குறைந்து $950.96 ஆகவும் இருந்தது. பல்லேடியம் 1.1% இழந்து $1,016.05 ஆக இருந்தது, இது 10-வது அமர்வுக்கு குறைந்தது.
இதற்கிடையில், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் டிசம்பரில் எதிர்பார்த்ததை விட அதிகமான நபர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன.
சென்னையில் தங்கம், வெள்ளி விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 2023 டிச.31ஆம் தேதி ஒரு கிராம் ரூ.5,910 ஆக காணப்பட்டது. இன்று (ஜன.10,2024) ஒரு கிராம் விலை ரூ.5820 ஆக சரிந்து விற்பனையாகி வருகிறது.
மற்றொரு ஆபரணமான வெள்ளியும் அதே நிலையில் காணப்படுகிறது. டிச.31ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளி ரூ.80 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ வெள்ளி ரூ.80 ஆயிரமாக இருந்தது.
தற்போது கிராம் வெள்ளி ரூ.77.50 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ வெள்ளி ரூ.77 ஆயிரத்து 500 ஆக விற்பனையாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.