Share Market News Today | Indian Express Tamil

5 மாத உயர்வை எட்டிய மஞ்சள் உலோகம்.. சென்செக்ஸ் வீழ்ச்சி, நிஃப்டி உயர்வு

மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்து 62,685 ஆகவும், தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 18,650 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

5 மாத உயர்வை எட்டிய மஞ்சள் உலோகம்.. சென்செக்ஸ் வீழ்ச்சி, நிஃப்டி உயர்வு
சந்தா காலத்தில் பத்திரத்தின் வெளியீட்டு விலை ரூ.5,409 ஆக இருக்கும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன.
இந்திய பங்குச் சந்தையில், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ், எதிர்மறையான அமர்வில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதே நேரம் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி ஒரு நிலையற்ற வர்த்தக அமர்வுக்குப் மத்தியில் 4.95 புள்ளிகள் உயர்ந்து வணிகத்தை நிறைவு செய்தது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 33 புள்ளிகள் சரிந்து 62,834 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி, 5.95 புள்ளிகள் உயர்ந்து 18,700 புள்ளிகளாகவும் முடிவடைந்தது.
என்எஸ்இ நிஃப்டி மிட்கேப் 100 0.23% வரையிலும், நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 0.43% வரையிலும் முடிவடைந்தது.
இதற்கிடையில், நிஃப்டி மெட்டல் மற்றும் நிஃப்டி பொதுத்துறை வங்கிகள் வர்த்தகத்தில் உயர்ந்து, 1.2% இன்ட்ராடேயில் உயர்ந்தன, அதே நேரத்தில் நிஃப்டி ஐடி மற்றும் நிஃப்டி ஆட்டோ ஆகியவை மிகப்பெரிய துறைகளில் பின்னடைவைச் சந்தித்தன.

பங்குகள் நிலை

ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், யுபிஎல், கோல் இந்தியா மற்றும் ஓஎன்ஜிசி ஆகியவை நிஃப்டி 50 இன் சிறந்த லாபம் ஈட்டியுள்ளன, ஹிண்டால்கோ வர்த்தகத்தில் 4.5% மேல் உயர்ந்தது.
அதேநேரத்தில், அப்பல்லோ மருத்துவமனைகள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், டெக்எம் மற்றும் பிரிட்டானியா ஆகியவை அன்றைய மிகப்பெரிய பின்தங்கிய நிறுவனங்களாக இருந்தன. அப்பல்லோ மருத்துவமனைகள் கிட்டத்தட்ட 2% இழந்தன.

வங்கி பங்குகள்

நிஃப்டி பேங்க், நிஃப்டி மீடியா, மிஃப்டி மெட்டல், நிஃப்டி பிஎஸ்யு வங்கி, நிஃப்டி பிரைவேட் பேங்க், நிஃப்டி ரியால்டி பங்குகள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.
மறுபுறம், நிஃப்டி ஆட்டோ, நிஃப்டி பைனான்சியல் சர்வீசஸ், நிஃப்டி எஃப்எம்சிஜி, நிஃப்டி ஐடி, நிஃப்டி பார்மா ஆகிய நிறுவனப் பங்குகள் லாபத்திலும் வர்த்தகமாகின.

இதற்கிடையில், பாங்க் ஆஃப் இந்தியா பங்குகள் கிட்டத்தட்ட 3 சதவீதம் உயர்ந்தன.

தங்கம் விலை

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், தங்கம் (பிப்ரவரி) ஃபியூச்சர் 10 கிராமுக்கு ரூ. 359 அல்லது 0.67% அதிகரித்து ரூ.54,209க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. சில்வர் மார்ச் ஃபியூச்சர்ஸ் MCX இல் ஒரு கிலோவுக்கு ரூ.749 அதிகரித்து ரூ.67,198க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த 5 மாதங்களில் இல்லாத உயர்வை தங்கம் எட்டியுள்ளது.
முந்தைய அமர்வில் ஜூலை 5 முதல் 1,808.20 டாலராக உயர்ந்த பின்னர், ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.5% உயர்ந்து $1,807.21 ஆக இருந்தது. அமெரிக்காவில் தங்கம் 0.6% அதிகரித்து $1,819.60 ஆக இருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold hits five month high