gold investment tamil investment ideas : ரிஸ்க் இல்லாத முதலீடு என்றவுடன் நம் கண்ணுக்கு தெரிவது ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள். மற்றவை யாவும் சேமிப்பு வகையைச் சார்ந்தது.நமக்கு கிடைக்கக்கூடிய வட்டி என்ன என்று நாம் பணத்தை போடும் போதே தெரியும். பெரும்பாலான சேமிப்பு பணவீக்கத்தைக் கட்டுப் படுத்துவதில்லை. எனவே நாம் முதலீட்டை தேர்ந்தெடுக்கிறோம்.
Advertisment
இந்தியாவில், தங்கத்தின் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் புதிய உச்சத்தில் வர்த்தகமாகி நடைபெற்று வருகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 4,815-ஆக அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருப்பதால், முதலீட்டாளர்கள் மனதில் தங்கம் அதிகம் மின்னத்துவங்கியுள்ளது. தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டிருப்பதால், தங்கத்தில் முதலீடு செய்யும் ஆர்வமும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், தங்கத்தின் விலை போக்கு எப்படி இருக்கும் எனும் கேள்வியும் எழுந்துள்ளது.
ஆபரண தங்கம் மற்றும் கட்டி தங்கம் வாங்குவதை குறைப்பதற்காகவும், தங்கத்தில் மக்களின் முதலீட்டை அதிகரிக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டது தான் தங்கப்பத்திர முதலீடு. இப்போது வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களிலும் இந்த ஸ்கீம் வந்து விட்டது. இத்திட்டத்தில், ஒரு கிராம் முதல் அதிகபட்சம், 400 கிராம்தங்கத்தை முதலீடு செய்யலாம்.
முதலீடு செய்யும் ஒரு கிராம் தங்கத்தின் விலை, 4,852 ரூபாய் ஆகும்.பத்திரத்தின் முதிர்வு காலம், எட்டு ஆண்டுகளாகும். தேவை ஏற்பட்டால், 5, 6 மற்றும் ஏழு ஆண்டுகளில் விலகிக்கொள்ளலாம். ஆண்டு வட்டியாக, 2.5 சதவீதம் வழங்கப்படும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை வட்டியை பெற்றுக்கொள்ளலாம். தங்கப்பத்திரத்தின் பேரில், வங்கிகளில் கடன் பெறலாம். இப்பத்திரங்களை மற்றவர்களுக்கு பரிசாகவும் வழங்கலாம்.
இப்படி ஒரு சிறப்பான திட்டத்தை நீங்களும் பங்கு கொள்ளலாம். தங்கத்தில் முதலீடு என்பது என்றுமே லாபம் தரக்கூடியது. அதே போல் சேமிப்பில் இது நல்ல பயனை தரக்கூடியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil