நகைக் கடன் எவ்வாறு செயல்படுகிறது? நீங்கள் அறிய வேண்டிய முக்கிய குறிப்புகள்

கடன் வாங்குபவர், புல்லட் பேமென்ட் (bullet repayment options), இ.எம்.ஐ-கள் அல்லது கடன் காலத்தின் முடிவில் அசலை செலுத்தி, கடன் காலம் முழுவதும் வட்டியை செலுத்தும் முறையை தேர்ந்தெடுக்கலாம்.

கடன் வாங்குபவர், புல்லட் பேமென்ட் (bullet repayment options), இ.எம்.ஐ-கள் அல்லது கடன் காலத்தின் முடிவில் அசலை செலுத்தி, கடன் காலம் முழுவதும் வட்டியை செலுத்தும் முறையை தேர்ந்தெடுக்கலாம்.

author-image
WebDesk
New Update
Gold Loan

இந்தியாவில் தங்க நகைக் கடனின் முக்கிய அம்சங்கள் குறித்து கடன் வாங்குபவர் என்ன அறிந்திருக்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisment

தங்க நகைக் கடன் என்றால் என்ன?

தங்க நகைக் கடன் என்பது வங்கிகள் அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) வழங்கும் ஒரு வகையான கடனாகும். இந்தக் கடனைப் பெறுவதற்கு ஈடாக தங்க நாணயங்கள் அல்லது நகைகள் பிணையாக வைக்கப்படுகின்றன. கடன்-மதிப்பு விகிதம் (Loan to Value - LTV) என்பது கடனின் அளவைத் தீர்மானிக்க பயன்படுத்தப்படும் தங்கத்தின் சந்தை விலையின் சதவீதமாகும். அசல் மற்றும் வட்டி இரண்டையும் திருப்பிச் செலுத்தியதும், கடன் வாங்கியவர் தங்கள் நகையை திரும்பப் பெறலாம்.

தங்கக் கடன் எவ்வாறு செயல்படுகிறது?

Advertisment
Advertisements

கடன் விண்ணப்பம்: நீங்கள் உங்கள் தங்கத்தை ஒரு NBFC அல்லது வங்கிக்கு எடுத்துச் செல்கிறீர்கள்; கடன் வழங்குபவர் தங்கத்தின் எடை மற்றும் தூய்மையைக் கருத்தில் கொள்கிறார்.

தங்கத்தின் மதிப்பீடு மற்றும் விலை நிர்ணயம்: கடன் வழங்குபவர் தங்கத்தின் தற்போதைய சந்தை விலையை பயன்படுத்தி அதை மதிப்பிடுவார். NBFC அல்லது வங்கி, 18 முதல் 24 காரட் வரையிலான தங்கத்தை மட்டுமே ஏற்கும்.

கடன் தொகை வழங்குதல்: கடன் வழங்குபவர் பொதுவாக விண்ணப்பிக்கும் நேரத்தில் கடன் தொகையை வழங்குவார். இது தங்கத்தின் மதிப்பில் 75% வரை இருக்கலாம்.

கடன் திருப்பி செலுத்தும் முறை: கடன் வாங்குபவர், புல்லட் பேமென்ட் (bullet repayment options), இ.எம்.ஐ-கள் அல்லது கடன் காலத்தின் முடிவில் அசலை செலுத்தி, கடன் காலம் முழுவதும் வட்டியை செலுத்தும் முறையை தேர்ந்தெடுக்கலாம்.

உங்கள் நகையை திரும்பப் பெறுதல்: கடன் முழுமையாக திருப்பி செலுத்தப்பட்டதும், உங்கள் தங்கம் டெபாசிட் செய்யப்பட்ட அதே நிலையில் திரும்பப் பெறப்படும்.

இந்தியாவில் தங்க நகைக் கடன்கள் ஏன் பிரபலமாக உள்ளன?

விரைவான விநியோகம்: மிக விரைவாக, பெரும்பாலும் 10 நிமிடங்களுக்குள்ளாகவே கடன் கிடைக்கும்.

பிணையம் வைக்கப்படும்: தங்கம் பிணையாக இருப்பதால், வருமான சான்று தேவையில்லை.

கடன் காலம்: பொதுவாக மூன்று முதல் முப்பத்தாறு மாதங்கள் வரை இருக்கும்.

குறைந்த வட்டி விகிதங்கள்: மற்ற கடன்களுடன் ஒப்பிடும்போது வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும்.

கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பு இல்லை: கடன் தவறும் வரை கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது.

Gold Loan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: