/tamil-ie/media/media_files/uploads/2018/12/sasikla-3.jpg)
income tax filing last date
வங்கிக்கடன் வாங்குவதற்கு முன் அதைபற்றிய விவரங்களை முமுமையாக தெரிந்துக்கொண்டு கடன் பெறுவது சிறந்த ஒன்றாகும். அந்த வகையில் தனி நபர் கடன் சிறந்ததா? தங்க நகை கடன் சிறந்ததா? என உங்களுக்கு அடிக்கடி எழும் சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறது இந்த பகிர்வு.
தங்க நகை கடன்:
நகை கடன் அதிகபட்சம் ரூ.1.5 கோடி வரை அளிக்கப்படும். உடனடியாக பணம் தேவைப்படும் நேரங்களில் தங்க கடனே எளிமையாக கிடைக்கும். தங்கள் கடனை ரூ.1000 முதல் பெறலாம்.
தங்க நகர் கடன் வாங்கும் போது அதுவே உத்தரவாதம் என்பதால் கிரெடிட் ஸ்கோர் குறித்து கவலைப்பட தேவையில்லை. ஆனால், கடன் தொகை குறிப்பிட்ட அளவிற்கும் அதிகமாக இருந்தால் கிரெடிட் ஸ்கோர் கணக்கிடப்படும்.
தங்க நகை கடனுக்கு அடையாள மற்றும் முகவரி ஆவணத்தினை சமர்ப்பித்தால் போதும் உடனே கடன் கிடைக்கும். வட்டி விகிதம், மாத தவனை போன்றவற்றில் சில சலுகைகள் கிடைக்கும். நகை கடன் 3 வருடங்களுக்குள் செலுத்த வேண்டும்.
ஐசிஐசிஐ நெட் பேங்கிங் யூஸ் பண்ண்றீங்களா? நீங்கள் வங்கிக்கு கட்ட வேண்டிய தொகை இதுதான்!
தனி நபர் கடன்:
தனி நபர் கடன் ரூ.40 லட்சம் வரையில் மட்டுமே அளிக்கப்படுகிறது. தனி நபர் கடன் வேண்டும் என்றால் குறைந்தது ரூ.5000 கடனாக பெற வேண்டும்.
தனி நபர் கடனுக்கு கண்டிப்பாக கிரெடிட் ஸ்கோர் தேவைப்படும். கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் வட்டி விகிதம் மற்றும் கடனை செலுத்தும் கால அளவு மாறும்.
தனிநபர் கடன் பெற முகவரி மற்றும் அடையாள ஆவணம், வருமான சான்றிதழ், வங்கி அறிக்கை போன்றவை சமர்ப்பிக்க வேண்டும். தனி நபர் கடனில் சலுகைகள் ஏதும் கிடைக்காது.
தனி நபர் கடனை 5 வருடங்களுக்கு செலுத்த வேண்டும். அதற்கு ஏற்றார் போல வட்டி விகிதம் உயரும்.
எஸ்.பி.ஐ க்கு அடுத்தப்படியாக வீட்டு கடனுக்கு மிக குறைந்த வட்டி தரும் வங்கி இதுதான்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.