சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மார்ச் மாதத்தில் அவுன்ஸ் ஒன்றுக்கு $2,070 என்ற உச்சத்தில் இருந்து நவம்பரில் ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு $1,616 ஆக குறைந்தது.
அதன் பின்னர் தொடர்ந்து சீராக மீண்டு வருகிறது என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது, மஞ்சள் உலோகத்தின் விலை சர்வதேச சந்தைகளில் அவுன்ஸ் $1,803 ஆகவும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 83-ல் இருக்கும் நேரத்தில் MCX-ல் 10 கிராமுக்கு ரூ.54,790 ஆகவும் உள்ளது.
இந்த நிலை உலக பொருளாதாரம், பணவீக்கம், கிரிப்டோகரன்சிகள் என பாதுகாப்பற்ற போக்குகள் நீடித்துவருவதால் முதலீட்டாளர்கள், பொதுமக்கள் மஞ்சள் உலோகத்தில் முதலீடு செய்துவருகின்றனர்.
ஏனெனில், நிச்சயமற்ற காலங்களில் பாதுகாப்பான புகலிடமாக தங்கத்தை அவர்கள் கருதுகின்றனர். இதனால் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
இதனால், இந்தாண்டு 10 கிராம் தங்கம் ரூ.60 ஆயிரம் வரை வாய்ப்புகள் உள்ளன.
இதற்கிடையில், ஃபெடரல் ரிசர்வ் மற்றும் பிற முக்கிய மத்திய வங்கிகள் மே 2022 இல் விகிதங்களை உயர்த்தத் தொடங்கியதில் இருந்து மஞ்சள் உலோகம் ஆதாயங்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக ஜெம் மற்றும் ஜூவல்லரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் முன்னாள் தலைவரும், காமா ஜூவல்லரியின் நிர்வாக இயக்குநருமான கொலின் ஷா கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/