/indian-express-tamil/media/media_files/2025/04/26/wWiQIygpnfHwVb5vLLL4.jpg)
ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை அதிகரித்து வருவது வாடிக்கையாகி விட்டது. டாலரின் விலை, உலக பொருளாதாரம் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
24 கேரட் தங்கம் வரியின்றி ரூ. 10 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதன் விலை மேலும் அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், 22 கேரட் தங்கத்தின் விலையும் ரூ. 10 ஆயிரத்தை தாண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கோல்டு ஒரு அவுன்ஸ் 3544 டாலர்கள் இருந்ததாக பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறுகிறார். இதன் விலை இன்னும் சுமார் 60 டாலர்கள் அதிகரிக்கும் போது, 22 கேரட் தங்கத்தின் விலையும் அதிகரிக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், தங்கத்தின் விலை தற்போதைய சூழலில் குறைவதற்கு வாய்ப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.
ஒரு நபர். வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று மகிழ்ச்சி அடைய தேவை இல்லை என அவர் எடுத்துரைக்கிறார். பணவீக்கம் தான் நமக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில், வருமான வரி செலுத்தி பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது தான் நாட்டிற்கு நல்லது என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் அறிவுறுத்துகிறார்.
இதன் விளைவாக தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். டாலரின் விலை வீழ்ச்சி அடையும் போது தங்கத்தின் விலை மேலும் உயருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அவர் கூறுகிறார். எனவே, வைப்பு நிதிகளில் பணத்தை முதலீடு செய்வதை காட்டிலும், சிறுகச் சிறுக தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் பார்க்க முடியும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்த வகையில், சேமிப்பு மற்றும் முதலீடு என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமானது. இதனை கருத்திற்கொண்டு மாறி வரும் பொருளாதார சூழல் மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையில் தங்கத்தில் முதலீடு செய்தால் சரியான லாபம் பார்க்கலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நன்றி - Money Pechu Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.