/tamil-ie/media/media_files/uploads/2023/02/tamil-indian-express-2022-07-12T110401.128-2.webp)
தங்கம் சவரன் ரூ. 560 வரை சரிந்து விற்பனையாகிவருகிறது.
Gold and Silver Rate Today : தங்கம் இன்று கிராமுக்கு ரூ.70 சரிந்து விற்பனையாகிவருகிறது. சென்னையை பொறுத்தமட்டில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5510 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.44,080 ஆக உள்ளது.
24 காரட் தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.6027 என நிர்ணயிக்கப்பட்டு ரூ.48,216 ஆக விற்பனையாகிவருகிறது.
நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இது கிராமுக்கு ரூ.70ம், சவரனுக்கு ரூ.560ம் சரிவாகும். அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு 30 பைசா சரிந்துள்ளது.
தற்போது கிராம் வெள்ளி ரூ.75.70 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.75,700 ஆக உள்ளது. இம்மாத தொடக்கத்தில் வெள்ளி கிராம் ரூ.67 வரை காணப்பட்டது.
தொடர்ந்து, கிராம் வெள்ளி ரூ.76 வரை உயர்ந்தது. இந்நிலையில் தற்போது கிராமுக்கு 30 காசுகள் வரை சரிந்துள்ளது. தங்கத்தை பொறுத்தவரை சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியும் தங்கத்தின் விலையை பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.