Gold Rate Today june 18: இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.9,250க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.121க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.9,250க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.121க்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
Gold rate today

இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் மீண்டும் சர்வதேச சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.  

Advertisment

அதன்படி, தங்கம் விலை நேற்று (ஜுன் 17) கிராமுக்கு ரூ.105 குறைந்து ரூ.9,200க்கும், சவரனுக்கு ரூ.840 குறைந்து ரூ.73,600க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று ரூ.120க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தங்கம் விலை இன்று (ஜுன் 18) அதிரடியாக உயர்ந்துள்ளது.

அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.9,250க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.121க்கு விற்பனையாகிறது.
Gold Rate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: