உலகளாவிய கலப்பு பொருளாதார குறிப்புகளின் விளைவாக இன்று (பிப்.20) தங்கம் விலை சீராக வர்த்தகம் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் வெள்ளி விலை 0.08% குறைந்துள்ளது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், தங்கம் ஏப்ரல் ஃபியூச்சர் 10 கிராமுக்கு ரூ.44 அல்லது 0.08% குறைந்து ரூ.56,213க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. அதேநேரத்தில், சில்வர் மார்ச் ஃபியூச்சர்ஸ் 50 ரூபாய் குறைந்து ஒரு கிலோவுக்கு 65,581 ரூபாய்க்கு MCX இல் வர்த்தகமானது.
உலகளவில், திங்களன்று மஞ்சள் உலோக விலைகள் வீழ்ச்சியடைந்தன. இதற்கிடையில், சமீபத்திய அமெரிக்க பொருளாதார தரவு பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற கவலையை எழுப்பிய பின்னர். ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.2% குறைந்து $1,837.59 ஆக இருந்தது.
சென்னையில் தங்கம் வெள்ளி
சென்னையை பொறுத்தமட்டில் 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராம் ரூ.5642 என நிர்ணயிக்கப்பட்டு, சவரன் ரூ.45136 ஆக உள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5280 ஆக நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.42240 ஆக காணப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் சரிந்து கிலோ பார் வெள்ளி ரூ.71706 ஆக உள்ளது.
பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63 ஆகவும் டீசல் லிட்டர் ரூ.94.24 ஆகவும் தொடர்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/