Gold, Silver Prices Today in tamil: உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் உலகப்பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால், வர்த்தகம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் ஒருபகுதியாக, கடந்த சில நாட்களாக, விலைமதிப்பற்ற உலோகமான தங்கம் விலையில் தொடர் மாற்றம் நிகழ வழிவகுத்துள்ளது.
இவை தவிர, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் நிலவி வரும் பணவீக்கம், விலைவாசி உயர்வு தங்கத்தின் மீதான முதலீட்டை தவிர்க்க செய்துள்ளது. மேலும் அமெரிக்காவில் நிகழும் பணவீக்கம் அந்நாட்டு மத்திய வங்கியை 75 அடிப்படை புள்ளி (பிபிஎஸ்) விகிதத்தை உயர்த்த செய்துள்ளது. இந்த அடிப்படை புள்ளி (பிபிஎஸ்) விகிதங்கள் மீண்டும் அடுத்த மாதத்தில் கடுமையாக உயர்த்தும் வாய்ப்பு அதிகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், தங்க முதலீட்டார்கள் இந்த வாரம் வாஷிங்டன் டிசி-யில் அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவலின் உரையை உற்று நோக்குவார்கள். ஏன்னென்றால், அதிக வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் போது, தங்க பத்திரத்தை வைத்திருப்பதற்கான வாய்ப்புச் செலவை அதிகரிக்கின்றன. எனவே, தங்க முதலீட்டார்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை தவிர்ப்பார்கள். இதனால் தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

தங்கம் விலை:
தங்கத்தின் விலை இம்மாத ஜூன் 1ஆம் தேதி அன்று சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் மறுநாளே ரூபாய்.160 உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனையானது. இதன்பிறகு, கடந்த செவ்வாய் கிழமை (ஜூன் 14) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் அதிரடியாகக் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,740க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு 760 ரூபாய் அதிரடியாகக் குறைந்து 37,920 ரூபாயக்கு விற்பனையானது.
இதேபோல், மறுநாள் புதன்கிழமை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து விற்பனையானது. அதன்படி சென்னையில், கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 4,715க்கும், சவரன் 37,720ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகான நாட்களில் தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் இருந்து.
அவ்வகையில் சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,775 ஆக உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 38,200 ரூபாய்க்கு விற்பனையாகியது. ஆனால், நேற்று மீண்டும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.4,765-க்கு விற்பனையாகியது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, சவரன் ரூ.38,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.4,755-க்கு விற்பனையாகியது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, சவரன் ரூ.38,040 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை:
ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு குறைந்து சென்னையில் 66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil