Gold Rate Today: ரூ.1500 அதிகரிப்பு; எந்தெந்த நகரங்களில் இன்று தங்கம் என்ன விலை?
Gold, Silver Prices Today in Chennai tamil: தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்பட்டாலும், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் நிலவி வரும் பணவீக்கம் அதன் மதிப்பில் ஏற்ற, இறக்கத்தை கொண்டு வருகின்றன.
Gold, Silver Prices Today in Chennai tamil: தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்பட்டாலும், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் நிலவி வரும் பணவீக்கம் அதன் மதிப்பில் ஏற்ற, இறக்கத்தை கொண்டு வருகின்றன.
Gold, Silver Prices Today: உக்ரைன் மீதான ரஷ்ய படையெப்பு உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய், தங்கம் முதலியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதேபோல் பங்குச்சந்தைகளில் தொடர் சரிவு நிகழ்ந்து வருவதால் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி, தங்கத்தில் முதலீடுகளை மாற்றி வருகின்றனர்.
Advertisment
தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்பட்டாலும், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் நிலவி வரும் பணவீக்கம் அதன் மதிப்பில் ஏற்ற, இறக்கமாக செய்கின்றன. தங்கம், பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இவ்விரு நாடுகளில் நிலவும் உயர் பணவீக்க விகிதங்கள் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலையை மிகவும் ஏற்ற இறக்கமாக ஆக்கியுள்ளன.
இதன் காரணமாக, கடந்த சில நாட்களாவே தங்கம் விலையில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இம்மாதம் ஜூன் 1ஆம் தேதியன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் மறுநாளே ரூபாய்.160 உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனையானது. இதன்பிறகு, கடந்த செவ்வாய் கிழமை (ஜூன் 14) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் அதிரடியாகக் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,740க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு 760 ரூபாய் அதிரடியாகக் குறைந்து 37,920 ரூபாயக்கு விற்பனையானது.
இதேபோல், மறுநாள் புதன்கிழமை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 4,715க்கும், சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 37,720ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகான நாட்களில் தங்கத்தின் விலை ஏற்றம் காணப்பட்டது. அவ்வகையில், இந்த வார தொடக்கத்தில் திங்கள் கிழமையை அன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 38,200 ரூபாய்க்கு விற்பனையானது.
Advertisment
Advertisements
ஆனால், நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை தங்கத்தின் விலை குறைந்தது. செவ்வாய் கிழமை அன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்தது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.4,755-க்கு விற்பனையாகியது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது, ஒரு சவரன் ரூ.38,040 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை
இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, ஒரு கிராம் ரூ4,770 விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38,160 விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், 22 கேரட் ஆபரணத் தங்கம் 100 கிராமுக்கு ரூ.1,500 அதிகரித்து ரூ.4,77,000 விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை:
வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையின் படியே இன்றும் விற்பனையாகி வருகிறது. அதன்படி சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.