Today Gold Rate: தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், வார தொடக்க நாளான இன்று இருமுறை தங்கம் விலை உயர்ந்துள்ளது. காலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.240 உயர்ந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.880 உயர்ந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.70 ஆயிரத்தை தாண்டியது. கடந்த ஏப்ரல் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக ஏப்ரல் 8ஆம் தேதி ரூ 65,800-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 22 ஆம் தேதி ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
ஏப்ரல் 30-ஆம் தேதி அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கம் ரூ 8,980-க்கும் சவரன் ரூ 71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மே 1 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிந்து ஒரு சவரன் ரூ.70,200க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.205 சரிந்து, ஒரு கிராம் ரூ.8,775க்கு விற்பனையானது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த மே 31-ம் தேதி (சனிக்கிழமை) ஒரு கிராம் தங்கம் ரூ.8,920க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.71,360க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. இந்நிலையில், வார துவக்க நாளான இன்று (ஜூன் 02) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,950க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை இன்று மட்டும் இருமுறை உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.