தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 11-ந்தேதியில் இருந்து விலை அதிகரிக்கத் தொடங்கி, கடந்த 13-ந்தேதி ஒரு சவரன் ரூ.74,360 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதற்கு மறுநாளும் விலை அதிகரித்து, மேலும் புதிய உச்சத்தை பதிவு செய்தது. இதனையடுத்து, கடந்த 16, 17-ந்தேதிகளில் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று விலை குறைந்து காணப்பட்டது.
நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 120 ஆக விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,265 க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் வில்லை சற்று குறைந்தது. அதன்படி, சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 680 க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,210 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 880 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.9,235 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 120 க்கு விற்பனையாகிறது.