/indian-express-tamil/media/media_files/dfGvMciIVL1WiFNuoW9P.jpg)
தொடர்ந்து உயரும் தங்கம்.. இல்லத்தரசிகள் கவலை!
தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 15-ந் தேதி தங்கம் விலை மளமளவென சரிந்து ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. அதைத் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை கடந்த 2 நாட்களாக மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.71,360-க்கு விற்பனையாகி வந்தது.
இந்நிலையில், வார தொடக்க நாளான நேற்று காலையும், மாலையும் என இருவேளையும் தங்கம் விலை உயர்ந்தது. இதையடுத்து ஒரு சவரன் ரூ.72,480-க்கும் கிராம் ரூ.9,060-க்கும் விற்பனையானது. இதையடுத்து இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,080-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,640-க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:
02-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,480
01-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
31-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
30-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
29-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,160
கடந்த சில நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 113 ரூபாய்க்கும் கிலோவுக்கு 2,000 ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.