/indian-express-tamil/media/media_files/2025/03/19/tBTn9PX6GgU5aRi9EOFy.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/19/tBTn9PX6GgU5aRi9EOFy.jpg)
தங்கம் ஒரு அத்தியாவசியப் பொருளாக மட்டுமன்றி, முதலீட்டிற்கான நம்பகமான வழிமுறையாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பலரையும் கவலையடையச் செய்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது, இன்றும் தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2024/12/24/vZtYtyLdTtYPboVHmStR.jpg)
நேற்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ₹15-ம், ஒரு சவரனுக்கு ₹120-ம் உயர்ந்து, ஒரு கிராம் ₹9,405-க்கும், ஒரு சவரன் ₹75,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேசமயம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ₹130-க்கும், ஒரு கிலோ ₹1,30,000-க்கும் விற்கப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2024/11/09/GIoJKqbsctpEVpERPZXR.jpg)
Gold Rate: ஆனால், இன்று ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை உயர்வு, காலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.520 உயர்வு, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,040 உயர்வு. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.76,280-க்கு விற்பனை, முதல் முறையாக கிராமுக்கு ரூ.9,500-ஐ கடந்தது.
/indian-express-tamil/media/media_files/2025/07/01/silver-price-hike-2025-07-01-14-50-01.jpg)
வெள்ளி விலையும் இந்த உயர்வுப் பட்டியலில் இணைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து, ஒரு கிராம் ₹131-க்கும், ஒரு கிலோ ₹1,31,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.