உலகில் சக்தி வாய்ந்த நாடாக வலம் வரும் ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது படையெப்பு நடத்தி போர்தொடுத்து வருகிறது. இந்த போர் பதற்றம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. இதேபோல், வல்லரசு நாடான அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பணவீக்கம், இந்தியாவில் நிலவும் பணவீக்கம், ரஷ்ய தங்க இறக்குமதி மீதான ஜி-7 நாடுகளின் தடை என பல்வேறு காரணிகளால் விலைமதிப்புமிக்க அபரணமான தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.
இந்தியாவில் தங்கம் விலை:
இந்தியாவில், நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.47,750 ஆக இருந்த நிலையில், இன்று அது குறைந்து ரூ.46,650 ஆக உள்ளது. இதேபோல், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலையும் ரூ.110 குறைந்து, ரூ.50,890 ஆக விற்பனையாகி வருகிறது.
தலைநகர் டெல்லியில் நேற்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.50,895 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.323 குறைந்து 10 கிராமுக்கு ரூ.50,572 ஆக உள்ளது. வெள்ளியின் விலை கடந்த வர்த்தகத்தில் கிலோவுக்கு ரூ.60,153ல் இருந்து ரூ.776 குறைந்து ரூ.59,377 ஆக உள்ளது.
சென்னையில் தங்கம் விலை:
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில், கடந்த மாத (ஜூன் மாதம்) முதல் தேதியில் தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், மறுநாளே விலை அதிகரித்தது. அதன்படி தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை ஆகியது. பின்னர் வந்த நாட்களில் சிறிய ஏற்ற இறக்கங்கள் இருந்தன.
ஆனால், மாதத்தின் மத்திய பகுதியில், அதாவது ஜூன் 14ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்தது. மீண்டும் மறுநாள், மேலும் ரூ.200 குறைந்தது. பின்னர் வந்த நாட்களில் வழக்கம் போல் சிறிய சிறிய மாற்றங்கள் தங்கம் விலையில் இருந்ததன.
நேற்று முன்தினம் ஜூன் 29ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.87 குறைந்து ரூ.4,683 ஆகவும், சவரனுக்கு ரூ. 696 குறைந்து ரூ.37, 464 ஆகவும் விற்பனையாகியது. மேலும், 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.46,830 ஆகவும், 24 காரட் 10 கிராமுக்கு ரூ.51,090 ஆகவும் விற்பனை விற்பனை செய்யப்பட்டது.
நேற்று 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.50 குறைந்து ரூ.46,780 ஆகவும், 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.60 குறைந்து ரூ.51,030 ஆகவும் விற்பனை விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று ஜூலை முதல் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.107 அதிகரித்து ரூ.4,785 ஆகவும், சவரனுக்கு ரூ. 856 அதிகரித்து ரூ.38, 280 ஆகவும் விற்பனையாகியது. மேலும், 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.47,850 ஆகவும், 24 காரட் 10 கிராமுக்கு ரூ.52, 200 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை:
நேற்று வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.65.30 காசு ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.65,300க்கு விற்பனையாகியது.
இந்நிலையில், இன்று கிராம் ஒன்றுக்கு ரூ. 10 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.65க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.65-க்கு விற்பனையாகி வருகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil