scorecardresearch

Gold, Silver Rate Today: தங்கம் விலை 2 மாதங்களில் புதிய உச்சம்; நகை பிரியர்கள் ஷாக்!

Gold, Silver Rates Today News Updates in tamil: இன்றைய தங்கம் விலையைப் பொறுத்தவரை, தலைநகர் டெல்லியில் 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.47,850 ஆக உள்ளது.

Gold, Silver Rate Today: தங்கம் விலை 2 மாதங்களில் புதிய உச்சம்; நகை பிரியர்கள் ஷாக்!
Tamil news updates

Gold Price Today, Gold Price Outlook, Gold Price Forecast in tamil: இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத வகையில் நேற்று அதிகபட்சமாக 10 கிராம் தங்கம் ரூ. 52,261 என்கிற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி 58,780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுறது.

இதற்கு, இந்தியா இறக்குமதி தங்கத்திற்கு வித்துள்ள வரி, அமெரிக்கா, இந்தியாவில் நிலவி வரும் பணவீக்கம், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்றவை முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பாக பேசியுள்ள கோடக் செக்யூரிட்டிஸின் VP- தலைவர் கமாடிட்டி ரிசர்ச் ரவீந்திர ராவ், “COMEX நிறுவனம் ஒரு அவுன்ஸ் தங்கத்தை 1810 டாலருக்கு அருகில் வர்த்தகம் செய்கிறது. குறைந்த பத்திர வர்த்தகம், பணவீக்க கவலைகள் மற்றும் அதிகரித்து வரும் வளர்ச்சி கவலைகள் மற்றும் சீனாவில் புதுப்பிக்கப்பட்ட வைரஸ் கவலைகள் ஆகியவற்றால் விலை அதிகரித்து வருகிறது. விலையை எடைபோடுவது ஃபெட் மற்றும் பிற மத்திய வங்கிகளின் பணவியல் இறுக்கமான நிலைப்பாடு, அமெரிக்க டாலரில் உறுதிப்பாடு மற்றும் தங்கம் இடிஎஃப் வெளியேற்றம் மற்றும் இறக்குமதி வரி உயர்வு காரணமாக இந்திய தேவையில் மந்தநிலை ஆகியவை உள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் தங்கம் விலை:-

இந்நிலையில், இந்தியாவில் இன்றைய (ஜூலை 5ம் தேதி) தங்கம் விலையைப் பொறுத்தவரை, தலைநகர் டெல்லியில் 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.47,850 ஆக உள்ளது.

சென்னையில் தங்கம் விலை:-

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் நிலையில், இன்று 5-வது நாளாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து சவரன் ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.7 உயர்ந்து ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை:-

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.64.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.700 உயர்ந்து 64,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold price today july 5 gold rate rise to over 2 months high silver rate also jumps