Today Gold, Silver Rate: தங்கம் விலை மேலும் ரூ750 சரிவு; வெள்ளி கிலோ இந்த ரேட்!
Gold rates today in Delhi, Chennai, Kolkata, Mumbai - 08 July 2022 in tamil: தலைநகர் டெல்லியில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 750 குறைந்து, ரூ. 46,850 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 820 குறைந்து ரூ. 51,110 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Gold rates today in Delhi, Chennai, Kolkata, Mumbai - 08 July 2022 in tamil: தலைநகர் டெல்லியில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 750 குறைந்து, ரூ. 46,850 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 820 குறைந்து ரூ. 51,110 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Gold, Silver Rates Today News Updates in tamil: நாட்டில் கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் அதிரடியான ஏற்ற இறக்கங்களை கண்டு வருகின்றன. தங்க முதலீடு செய்யும் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்படுவதற்கு, சர்வதேச சந்தையில் நாணய விலையில் ஏற்படும் மாற்றங்கள், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, வட்டி விகிதங்கள், நகைச் சந்தை, புவியியல் பதட்டங்கள், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணங்கள் உள்ளன. மற்றும் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிக்கலாம் என தெரிவித்ததால் தங்கம் விலை சரிந்து வருகிறது என்று தெரிவிக்கிறார்கள்.
Advertisment
இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை:
இந்நிலையில், இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் இன்று தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. அதன்படி தலைநகர் டெல்லியில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 750 குறைந்து, ரூ. 46,850 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 820 குறைந்து ரூ. 51,110 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்களுக்கும் பொருந்தும்.
Advertisment
Advertisements
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.57க்கும், ஒரு கிலோ ரூ.57,000 -க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் தங்கம் விலை:
தமிழகத்தின் சென்னையில் நேற்று 2வது நாளாக தொடர்ந்து தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் (புதன் கிழமை) தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 65 ரூபாயும், சவரனுக்கு 520 ரூபாயும் அதிரடியாக குறைந்திருந்தது. 22காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ4,740 ஆகவும், ஒரு சவரன் ரூ.37,920க்கும் விற்பனையாகியது. 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 47, 400 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 51, 710 ஆகவும் இருந்தது.
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.68 குறைந்து, ரூ.4,672 ஆகவும், சவரனுக்கு ரூ.544 குறைந்து ரூ.37,376க்கும் விற்பனையாகியது. மேலும், 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.46,720 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 50,970 ஆகவும் இருந்தது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 4 அதிகரித்து ரூ.4,676 ஆகவும், சவரனுக்கு ரூ.32 அதிகரித்து ரூ. 37, 408-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 10 கிராம் 22 காரட் தங்கம் விலை ரூ. 40 அதிகரித்து ரூ.46,720 ஆகவும், 24 காரட் தங்கம் விலை ரூ. 40 ரூ.50,970 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று வெள்ளி விலை அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் அதிகரித்து ரூ.62.50 காசுகளுக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.62,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.