New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/02/a531.jpg)
Tamil nadu news today live
Tamil nadu news today live
தலைநகர் டெல்லியில் நேற்று(பிப்.8) தங்கத்தின் விலை மிகவும் சரிந்து காணப்பட்டது. 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.34,175க்கு விற்பனையானது. அதேபோல், வெள்ளியின் விலை ரூ.570 வரை குறைந்து, கிலோ ரூ.40,930க்கு விற்பனையானது. தேவை குறைவு காரணமாக தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்டாலும், உலகளவில் தங்க விற்பனை அந்த வீழ்ச்சியை கட்டுப்படுத்தியது.
டெல்லியில், 99.9 சதவிகித, 99.5 சதவிகித வகை சுத்தமான நகைகள் 10 கிராமுக்கு ரூ.5 குறைந்து முறையே 34,175 மற்றும் 34,025 என்று நேற்று விற்பனை ஆனது. வெள்ளியைப் பொறுத்தவரை, 1 கிலோவுக்கு ரூ.570 குறைந்து ரூ.40,930க்கு விற்பனை ஆனது. வார சந்தையில் கிலோவுக்கு ரூ.570 குறைந்து 39,829 என்று விற்பனை ஆனது.
மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 'ஒருங்கிணைந்த தங்க திட்டத்தை விரைவில் அரசு கொண்டு வரவுள்ளது என்றும், அந்தப் பிரிவின் வளர்ச்சியை அதிகரிக்க, உள்நாட்டு தங்க குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், தங்க இறக்குமதியை 10 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக குறைக்க அரசு ஆலோசித்து வருகிறது என்றும் தெரிவித்தார். 'தங்கம் இறக்குமதியால், தலைநகரின் வர்த்தகம் பாதிக்கப்படுகிறது. ஏற்றுமதி தொடர்பான விஷயம் தான் இந்தத் துறையில் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று. அதேசமயம், நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைப்பது நிதித்துறை அமைச்சகத்தின் பொறுப்பாகும். மேலும், இறக்குமதியை நெறிமுறைப்படுத்தி, கட்டுப்பாட்டில் வைத்து, இரண்டையும் சம அளவில் பேலன்ஸ் செய்வதே நோக்கம்" என்றும் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.