Gold And Silver Prices Today | Gold Rate | தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் பல்வேறு மாற்றங்களால் ஏற்படுகின்றன.
தங்கத்தின் மீதான உலகளாவிய ஆசை, நாடுகளுக்கிடையேயான நாணய மதிப்புகளில் உள்ள மாறுபாடுகள், தற்போதைய வட்டி விகிதங்கள் மற்றும் தங்க வர்த்தகம் தொடர்பான அரசாங்க விதிகள் போன்றவை இந்த மாற்றங்களில் பங்கு வகிக்கின்றன.
மேலும், உலகப் பொருளாதாரத்தின் நிலை மற்றும் பிற நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலரின் ஆற்றல் போன்ற உலகளாவிய நிகழ்வுகளும் இந்திய சந்தையில் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த நிலையில் சென்னையில் தங்கத்தின் விலை குறித்து பார்க்கலாம்.
சென்னையில் தங்கம் விலை
22 காரட் ஆபரணத் தங்கம்
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.6690 என நிர்ணயிக்கப்பட்டு, சவரன் ரூ.53,520 என உள்ளது. நேற்றைய விலையை விட இது கிராமுக்கு ரூ.35ம், சவரனுக்கு ரூ.280ம் குறைவாகும்.
24 காரட் தங்கம்
24 காரட் தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.7160 என நிர்ணயிக்கு 8 கிராம் தங்கம் ரூ.57280 ஆக உள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி இன்று கிலோ ரூ.700 வரை அதிகரித்து காணப்படுகிறது. இன்று கிராம் வெள்ளி ரூ.90.70 காசுகளாக உள்ளது.
நேற்று இது, ரூ.90 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மே மாத தொடக்கத்தில் வெள்ளி ரூ.86.50 வரை சரிந்து காணப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“