Advertisment

ரூ.160 வரை.. 10 நாள்கள் பின்நோக்கி சென்ற தங்கம், வெள்ளி; புதிய ரேட் இதுதான்!

தங்கம் விலை இன்று (ஜன.16,2024) பவுனுக்கு ரூ.160 வரை சரிந்து காணப்படுகிறது. 2024ல் தங்கம் தொடர்ந்து சரிந்து காணப்படுகிறது. ஜன.7ஆம் தேதி விலையில் தங்கம் இன்று விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 19 June 2024 CHENNAI in Tamil

தங்கம் விலை இன்று சரிவை சந்தித்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

gold-rate | சென்னையில் தங்கம் விலை இன்று (ஜன.16,2024) சவரனுக்கு ரூ.180 வரை சரிந்து காணப்பட்டது. இன்றைய விலை ஜன.7ஆம் தேதி காணப்பட்ட விலைஆகும். ஆக 10 நாள்களுக்கு பிந்தைய விலையில் இன்று தங்கம், வெள்ளி விற்பனை ஆகி வருகிறது.

Advertisment

அந்த வகையில், இன்று 24 காரட் தங்கம் கிராம் ரூ.6320க்கும், சவரன் தங்கம் (8 கிராம்) ரூ.50,560 ஆகவும் காணப்பட்டது. ஆபரணத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.5,850 ஆகவும் சவரன் ரூ.46,800 ஆகவும் காணப்பட்டது.

இது நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.20ம், சவரனுக்கு ரூ.160ம் குறைவாகும். நேற்று கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.5,870ஆகவும், சவரன் ரூ.46,960ஆகவும் காணப்பட்டது.

வெள்ளி கிலோ ரூ.300 சரிவு

வெள்ளியை பொறுத்தமட்டில் கிராம் நேற்றைய விலையை காட்டிலும் 30 பைசா வரை சரிந்து காணப்பட்டது. இது கிலோவுக்கு ரூ.300 சரிவாகும்.

இன்று கிராம் வெள்ளி ரூ.78ஆக நிர்ணயிக்கப்பட்டு, கிலோ வெள்ளி ரூ.78 ஆயிரமாக உள்ளது. ஜனவரி 7ஆம் தேதி வெள்ளியும் இதே விலையில் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment