gold rate in chennai today : சென்னையில் ஒரே நாளில் தங்கத்தின் விலையும், வெள்ளியின் விலையும் அதிரடி உச்சத்தைத் தொட்டு விற்பனையாகி வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டு நாட்களில் சுமார் ஆயிரம் ரூபாய் உயர்ந்து 26 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் அதன் பாதிப்பு உள்ளூர் சந்தையிலும் எதிரொலிக்கிறது.
ஆபரணத் தங்கம் சவரன் ஒன்று 25 ஆயிரத்து 176 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று 528 ரூபாய் உயர்ந்ததது. இந்நிலையில் இன்று மேலும் 464 ரூபாய் உயர்ந்து சவரன் ஒன்று 26 ஆயிரத்து 168 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 271 ரூபாயாக உள்ளது.
அதே போன்று வெள்ளி விலை இரண்டு நாளில் கிலோ ஒன்றுக்கு 1200 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் ஒரு கிராம் வெள்ளி 40 ரூபாய் 30 காசுகளுக்கு விற்ற நிலையில் இன்று 1 ரூபாய் 20 காசுகள் அதிகரித்து 41 ரூபாய் 50 காசுகளுக்கும் ஒரு கிலோ வெள்ளி நேற்று முன் தினம் 40 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று 41 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது
வரும் நாட்களில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு மேலும் உயர்ந்து விற்கும் என்றும், பொது மக்கள் சிறிது நாட்கள் தங்கள் வாங்குவதை குறைத்துக்கொள்வது அவர்களது சேமிப்பிற்கு நல்லது என்றும், செயற்கையான இந்த உயர்வு எதிர்பாராத வகையில் அதிரடியாக குறைவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் சில தங்க நகை விற்பனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த தங்க விலை உயர்வு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. 1 கிராம் தங்கம் வாங்க மாத சம்பளத்தை சேர்த்து வைப்பவர்களுக்கு இந்த தங்க விலை உயர்வு மிகப் பெரிய அதிர்ச்சி தான்.