நெருங்கும் திருமண சீசன்: உச்சம் தொட்ட தங்கம் விலை; கடந்த 10 ஆண்டுகள் நிலவரம் என்ன?

திருமண தேதிகள் அதிகமாக வருவதால், ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்வை சந்தித்துள்ளது,

திருமண தேதிகள் அதிகமாக வருவதால், ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்வை சந்தித்துள்ளது,

author-image
WebDesk
New Update
Gold

அடுத்து வரும் மாதங்களில் திருமண தேதிகள் அதிகமாக உள்ள நிலையில், தங்கத்தின் வரலாறு காணாத வகையில் உயர்வை வந்தித்துள்ளது. இதில் தங்கம் கிராம் ரூ7000-க்கும், ஒரு சவரன் ரூ56000-க்கு உயர்ந்துள்ளது.

Advertisment

இந்தியாவில், ஆபரண தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில நாட்களில் சற்று விலை குறைந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் அதை விட அதிகமாக உலை உயர்வை சந்திக்கிறது. அதிலும் சுபமுகூர்த்த தினம் என்றால், தங்கம் விலை கடும் உயர்வை சந்திப்பது வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்வு. அந்த வகையில் அடுத்து வரும் மாதங்கள் சுபமுகூர்த்த தினம் அதிகம் உள்ளதால், வழக்கம்போல் தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது.

அடுத்த வரும் நவம்பர் மாதம், 11, டிசம்பர் 5, ஜனவரி 11, பிப்ரவரி 14 என தொடர்ந்து சுபமுகூர்த்த தினங்கள் வருவதால், பல குடும்பங்கள் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருப்பார்கள். அவர்கள் கண்டிப்பாக திருமத்ணதிற்கு தங்க நகைகள் எடுப்பார்கள் என்பதால், தங்கத்தின் விலை இப்போதே வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இந்த வகையில், தங்கம் ஒரு கிராம் ரூ7000-க்கும், ஒரு சவரன் ரூ56000-க்கும் விலை ஏற்றத்தை சந்தித்துள்ளது.

திருமண தினங்களில், தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்வை சந்தித்துள்ளதால், மக்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துபோய் நிற்கின்றனர். ஒரு சிலர், திருமணத்திற்கு தங்க நகைகளை எடுப்பதை குறைத்துக்கொண்டு தங்கள் வீட்டில் ஏற்கனவே வைத்துள்ள தங்க நகைகளை திருமணத்திற்காக பயன்படுத்திக்கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளது. ஆனாலும் தங்கம் லட்சுமி தேவியுடன் தொடர்புடையது என்பதால், கண்டிப்பாக வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயமும் உள்ளது.

Advertisment
Advertisements

அதே போல் புதுமண தம்பதிகளுக்கு, தங்கம் மகிழ்ச்சியையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் என்பதால், எந்த மதமாக இருந்தாலும், திருமணம் என்று வரும்போது, தங்கம் அங்கே முதல் தேர்வாக தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை – கிராம் கணக்கில்

ஆண்டுஒரு கிராம் விலை
2014ரூ 2,396
2015ரூ 2,405
2016ரூ 2,837
2017ரூ 2,736
2018ரூ 2,768
2019ரூ 3,503
2020ரூ 4,557
2021ரூ 4,246
2022ரூ 4,391
2023ரூ 5,160
2024ரூ 7,089 (செப்டம்பர் 24 அன்று)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: