ரூ.45,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை: இன்று மேலும் உயர்வு

24 காரட் தூயத் தங்கம் கிராம் ரூ.6,065 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.48,520 என உள்ளது.

gold silver price
Gold Silver Price in Metropolitan Cities – 24th March 2023

சென்னையில் இன்று ஒரு 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5,560 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இன்று கிராமுக்கு ரூ.20 அதிகரித்துள்ளது. தற்போது ஒரு சவரன் தங்கம் 44,480 ஆக உள்ளது.

24 காரட் தூயத் தங்கம் கிராம் ரூ.6,065 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.48,520 என உள்ளது.

கடந்த காலங்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.45 ஆயிரம் வரை விலை உயர்ந்து காணப்பட்டது. வெள்ளி விலை கடந்த சில நாள்களாக உச்சத்தில் இருந்த வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 70 காசுகள் வீதம் சரிவை சந்தித்துள்ளது.

தற்போது கிராம்  வெள்ளி ரூ.75.70 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.75,700 உள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் வெள்ளி கிராம் 67.30 காசுகள் வரை சரிந்தது. அதன் பின்னர் தொடர் உயர்வை கண்டது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,515 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.44,120 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.20 மற்றும் சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,015 என்று, சவரனுக்கு ரூ.48,120 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.22 மற்றும் சவரனுக்கு ரூ.176 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.73,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.400 அதிகரித்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,500 என்றும் சவரனுக்கு ரூ.44,000 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.20 மற்றும் சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,000 ஆகவும் சவரனுக்கு ரூ.48,000 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.22 மற்றும் சவரனுக்கு ரூ.176 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.73,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.400 அதிகரித்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,500 என்றும் சவரனுக்கு ரூ.44,000 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.20 மற்றும் சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,000 ஆகவும் சவரனுக்கு ரூ.48,000 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.22 மற்றும் சவரனுக்கு ரூ.176 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.73,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.400 அதிகரித்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,505 என்றும் சவரனுக்கு ரூ.44,040 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.20 மற்றும் சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,005 என்றும் சவரனுக்கு ரூ.48,040 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.22 மற்றும் சவரனுக்கு ரூ.176 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ.75,700 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.300 அதிகரித்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,500 என்றும் சவரனுக்கு ரூ.44,000 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.20 மற்றும் சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,000 என்றும் சவரனுக்கு ரூ.48,000 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.22 மற்றும் சவரனுக்கு ரூ.176 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ.75,700 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.300 அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold rate today 1 gram in chennai delhi mumbai bangalore hyderabad 24th march 2023

Exit mobile version