Gold rates today in Chennai Tamil News: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது. மறுநாள் செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது. இதேபோல் புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்தது. இதேபோல், நேற்று முன்தினம் வியாழக்கிழமை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. சவரனுக்கு ரூ. 136 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது.
இருப்பினும், தங்கத்தின் விலை நேற்று வெள்ளிக்கிழமை சற்று குறைந்தது. சவரனுக்கு ரூ. 64 குறைந்து ரூ.43,800-க்கும், கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.5,475-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று அப்படியே உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.43,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,978-க்கும், ஒரு சவரன் ரூ. 47,824-க்கும் விற்பனையாகியது.
வெள்ளி விலை
தங்கம் போல் வெள்ளியின் விலையும் அப்படியே அதிகரித்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்த நிலையில், இன்று வெள்ளியின் 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.80,000 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil