Advertisment

ஓணம் பண்டிகை ஸ்பெஷல்… அப்படியே எகிறிய தங்கம் விலை!

இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.360 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold Silver Price Today 29 February 2024 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,022-க்கும், ஒரு சவரன் ரூ. 48,176-க்கும் விற்பனையாகியது.

Gold, Silver Rates Today News Updates in tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாகஆட்டம் காட்டி வருகிறது. நேற்று தங்கம் விலை சற்று குறைந்து காணப்பட்டது. சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ.43,800-க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,475 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,160 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து 5,520 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,022-க்கும், ஒரு சவரன் ரூ. 48,176-க்கும் விற்பனையாகியது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80. 20 -க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.80,200 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Business Gold Gold Selling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment