Advertisment

ஓணம் பண்டிகை எதிரொலி; மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதுதான்!

நேற்று ஓணம் பண்டிகையை ஒட்டி தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 20 March 2024 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,033-க்கும், ஒரு சவரன் ரூ. 48,264-க்கும் விற்பனையாகியது.

Gold, Silver Rates Today News Updates in tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாகஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், நேற்று ஓணம் பண்டிகையை ஒட்டி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. சவரனுக்கு ரூ.360 உயர்ந்து தங்கம் விலை ஒரு சவரன் ரூ.44,160 -க்கும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து 5,520 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து 5,530-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,033-க்கும், ஒரு சவரன் ரூ. 48,264-க்கும் விற்பனையாகியது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80. 20 -க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.80,200 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

Gold Rate Business Gold Gold Selling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment