/indian-express-tamil/media/media_files/2024/12/14/Qhp36Tl4msqM6c9fDXc3.jpg)
Gold rate today 5 June Thursday
/indian-express-tamil/media/media_files/2024/11/07/DOmPy5ZJUKeoYA6ZHuF8.jpg)
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமையன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,120 உயர்ந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ரூ.160-ம், நேற்று ரூ.80-ம் உயர்ந்தது. இந்த தொடர் உயர்வினால் ஒரு சவரன் தங்கம் ரூ.72,720-க்கு விற்பனையானது.
/indian-express-tamil/media/media_files/2024/11/05/iNX9HHjvAY2UmXASasDQ.jpg)
இந்த நிலையில், நான்காவது நாளாக இன்றும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,130-க்கு விற்பனையாகிறது. மேலும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040-க்கு விற்பனையாகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/11/09/GIoJKqbsctpEVpERPZXR.jpg)
கடந்த நான்கு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் விலை உயர்வு வாங்குபவர்களுக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/j6eJMkNkceAvM1m13vWy.jpg)
அதே சமயம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.