சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்.4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச.4-ம் தேதி பவுன் ரூ.47,800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.
பின்னர் கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. அதன் பின்னர் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை காணப்படுகிறது. குறிப்பாக கடந்த மே 20-ம் தேதி ரூ.55,200 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.
நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,200-க்கு, கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,650-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் இன்று (ஜூன் 15) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.6,705-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.53,640-க்கு விற்பனையாகிறது.
இதே போன்று 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, ரூ.5,492-க்கும் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.43,936-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளியின் விலை, கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.95.60 காசுகளுக்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.95,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“