சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.54,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்.4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச.4-ம் தேதி பவுன் ரூ.47,800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.
பின்னர் கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. அதன் பின்னர் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை காணப்படுகிறது. குறிப்பாக கடந்த 20-ம் தேதி ரூ.55,200 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.
நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,920-க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,740-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் இன்று (மே 29) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,775-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.54,200-க்கு விற்பனையாகிறது.
24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,245-க்கும், சவரன் ரூ.57,960-ஆக விற்பனையாகிறது.
அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.20 காசுகள் ரூ.102.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.102,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“