Gold Rate | அமெரிக்க டாலர் குறியீட்டில் ஏற்றம் இருந்தபோதிலும், திங்கட்கிழமை அதிகாலை ஒப்பந்தங்களின் போது தங்கத்தின் விலைகள் உயர்ந்து வர்த்தகத்தை சந்தித்தன.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் அல்லது எம்.சி.எக்ஸில், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹72,214 ஆக உயர்ந்து, கமாடிட்டி சந்தையின் தொடக்க மணியின் சில நிமிடங்களில் 10 கிராமுக்கு ₹72,362 ஆக உயர்ந்தது.
சர்வதேச சந்தையில், ஸ்பாட் தங்கத்தின் விலை ட்ராய் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,360 டாலராக வர்த்தகம் செய்யப்படுகிறது. இது வெள்ளிக்கிழமை முடிவில் சுமார் 0.70 சதவீதம் அதிகமாகும்.
சென்னையில் தங்கம் விலை
சென்னையை பொறுத்தவரை 24 காரட் ஆபரணத் தங்கம் நேற்று கிராம் ரூ.7340 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.58,720 ஆக காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று கிராம் ரூ.7305 என நிர்ணயிக்கப்பட்டு, கிராம் ரூ.58440 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆபரணத் தங்கம்
ஆபரணத் தங்கத்தை பொறுத்தவரை, நேற்று கிராம் ரூ.6870 ஆக நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.54,960 ஆக விற்பனையானது.
இந்த நிலையில் இன்று ஒரு கிராம் ரூ.6870 ஆக நிர்ணயிக்கப்பட்டு, ஒரு கிராம் ரூ.6,835 ஆகவும், சவரன் ரூ.54,680 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
ஆக, தங்கம் கிராம் ரூ.35 சரிந்து சவரனுக்கு ரூ.280 சரிந்து காணப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. கிராம் ரூ.90 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ ரூ.90 ஆயிரமாக உள்ளது. வெள்ளி ஏப்.9ஆம் தேதி கிராம் ரூ.88 ஆக நிர்ணயிக்கப்பட்டு, கிலோ ரூ.88 ஆயிரமாக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“