/indian-express-tamil/media/media_files/2025/05/22/LcOW9HB5posMvbOSOz4R.jpg)
இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை; ரூ.97,000-ஐ கடந்தது ஒரு சவரன்!
Gold Rate Today, Oct.21: தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறி வந்தது. கடந்த 8-ந்தேதி ஒரு பவுன் ரூ.90 ஆயிரத்தை தாண்டிய நிலையில், அதன் பின்னரும் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போனது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்திலேயே பயணித்தது. அந்த வகையில் 17-ந்தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 600 என்ற உச்சத்தை தொட்டது. தொடர்ந்து விலை உயர்ந்து வந்த சூழலில், எந்த அளவுக்கு ஏற்றம் கண்டதோ, அதேபோல் கடந்த 18-ந்தேதி அதிரடியாக தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.200-ம், பவுனுக்கு ரூ.1,600-ம் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12 ஆயிரத்துக்கும், ஒரு பவுன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் கடந்த 2 தினங்களாக தங்கம் விலை சரிந்தது. நேற்றைய நிலவரப்படி. கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 920-க்கும், ஒரு பவுன் ரூ.95 ஆயிரத்து 360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பெங்களூருவிலும் நேற்று தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.15-ம், பவுனுக்கு ரூ.120-ம் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்து 980-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.95 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் நேற்று வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.190-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை குறையுமா என எதிர்பார்த்த இல்லத்தரசிகளுக்கு இன்று அதிர்ச்சியே காத்திருந்தது. தங்கம் விலை இன்று ஒரு கிராம் ரூ.260 உயர்ந்துள்ளது. பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்து ரூ.97,440-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ரூ.2 குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.190 ஆக விற்பனையான நிலையில், இன்று ரூ.188 ஆக விற்பனையாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.