தங்கம் கடந்த ஒரு வாரத்தில் கிராமுக்கு ரூ.110 வரை சரிந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4,695 ஆக நிர்ணயிக்கப்பட்டு, சவரன் ரூ.37680 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 24 காரட் தூயத் தங்கம் கிராம் ரூ.5,097ஆக நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.40,776 ஆக உள்ளது.
இது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு ரூ.12 சரிவாகும். கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு கிட்டத்தட்ட ஆயிரம் வரை சரிவை கண்டுள்ளது.
ஆகஸ்ட் 28ஆம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ.5,207 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது தங்கம் கிராமுக்கு ரூ.110 வரை சரிந்துள்ளது.
மற்ற நகரங்களில் ஆபரணத் தங்கம் விலை
- மும்பை ரூ.46,400
- டெல்லி ரூ.46,550
- கொல்கத்தா ரூ.44,400
- பெங்களூரு ரூ.46,450
- ஹைதராபாத் ரூ.46,400
- திருவனந்தபுரம் ரூ.46,400
- புனே ரூ.46,430
- வதோதரா ரூ.46,430
- ஜெய்ப்பூர் ரூ.46,550
- விசாகப்பட்டினம் ரூ.46,400
- மைசூரு ரூ.446,450
வெள்ளி விலை
வெள்ளி விலை நேற்று போல் இன்றும் கிராமுக்கு ரூ.58ஆக தொடர்கிறது. கடந்த மாதம் வெள்ளி கிராம் ரூ.64.80 வரை உயர்ந்து விற்பனையானது. தற்போது கிராம் ரூ.58 ஆக உள்ளது.
அந்த வகையில் வெள்ளி கிலோ 6800 வரை குறைந்துள்ளது. தற்போது கிலோ வெள்ளி ரூ.58 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பெட்ரோல், டீசசல் நிலவரம்
பெட்ரோல் டீசல் விலை கடந்த இரு மாதங்களைப் போல் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63 எனவும், டீசல் லிட்டர் ரூ.94.24 எனவும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தங்கம், வெள்ளி விலை குறைந்து காணப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil