scorecardresearch

கொஞ்சமா கூடிய தங்கம்.. இன்றைய நிலவரம்

Gold rates today in Delhi, Chennai, Kolkata, Mumbai – 03 September 2022

Gold Price Today, 03 September 2022
இன்று 03 செப்டம்பர் தங்கம், வெள்ளி விலை நிலவரம்

தங்கம் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று கிராமுக்கு ரூ.7 அதிகரித்து விற்பனையாகிறது. அதாவது சவரனுக்கு ரூ.56 கூடியுள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4722 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.37776 ஆக உள்ளது. 24 காரட் 99.99 தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.5124 ஆகவும் சவரன் ரூ.40992 ஆகவும் உள்ளது.
நேற்று (செப்.2) ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4722 எனவும் 24 காரட் தங்கம் கிராம் 5117 எனவும் விற்பனையானது. தங்கத்தைப் போல் வெள்ளியும் இன்று சற்று விலை கூடியுள்ளது.

வெள்ளி விலை

வெள்ளியை பொறுத்தமட்டில் கிராமுக்கு ரூ.20 காசுகள் அதிகரித்து கிராம் ரூ.50.20 காசுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிலோ பார் வெள்ளி ரூ.58200 ஆக காணப்படுகிறது.
கடந்த மாதம் வெள்ளி விலை அதிகப்பட்சமாக கிராம் ரூ.64 வரை உயர்ந்து காணப்பட்டது. அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ.6 ஆயிரம் வரை சரிவை கண்டுள்ளது.

மற்ற நகரங்களில் 10 கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நிலவரம்

  1. மும்பை ரூ.46650
  2. டெல்லி ரூ.46800
  3. கொல்கத்தா ரூ.46650
  4. பெங்களூரு ரூ.46700
  5. ஹைதராபாத் ரூ.46650
  6. திருவனந்தபுரம் ரூ.46650
  7. புனே ரூ.46658
  8. வதோதரா ரூ.46680
  9. ஜெய்ப்பூர் ரூ.46800
  10. விஜயவாடா ரூ.46650
  11. பாட்னா ரூ.46680
  12. நாக்பூர் ரூ.46680
  13. சத்தீஸ்கர் ரூ.46800
  14. புவனேஸ்வர் ரூ.46650
  15. மைசூரு ரூ.46700
  16. லக்னோ ரூ.46800

சர்வதேச காரணிகள் காரணமாக தங்கம் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது. கடந்த மாதம் அதிகரித்த தங்கத்தின் விலை இம்மாதம் தொடக்கத்தில் இருந்தே சரிவில் காணப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை

கடந்த இரு மாதங்களை போல் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63 எனவும் டீசல் லிட்டர் ரூ.94.24 எனவும் விற்பனையாகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold rates today 03 september 2022 the gold rate in chennai increased by rs56 today

Best of Express