Gold rates today at Delhi, Chennai, Kolkata, and Mumbai Tamil News: உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. போர் பதற்றம் காரணமாக சமையல் எரிவாயு, கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் உள்ளிவற்றின் விலையில் கடுமையான ஏற்றமும், மிதமான சரிவுமாக இருந்து வருகிறது. எனவே, பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யும் மக்கள் பாதுகாப்பான முதலீடாக கருதும் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.
இவற்றுடன், ஜி-7 உச்சி மாநாட்டில் எட்டப்பட்ட ரஷ்ய தங்க இறக்குமதிக்கு தடை முடிவு, தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காக அதன் மீது இந்தியா விதித்துள்ள புதிய சுங்க வரி (15 சதவீதம்), அமெரிக்கா, இந்தியாவில் நிலவும் பணவீக்கம், டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சி உள்ளிட்டவை தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றத்தை கொண்டு வருகின்றன.
இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்:-
இந்தியாவில் தங்கத்தின் விலை இன்று கிட்டத்தட்ட ஒரு சதவீதம் அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்டது. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், தங்கம் அக்டோபர் ஃபியூச்சர் ரூ.461 அல்லது 0.9 சதவீதம் உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.51,850 ஆக இருந்தது. முந்தைய அமர்வில், இதன் விலை 10 கிராமுக்கு ரூ.51,389 ஆக இருந்தது.வெள்ளி செப்டம்பர் ஃபியூச்சர்ஸ் கிலோ ஒன்றுக்கு ரூ. 326 அல்லது 0.6 சதவீதம் அதிகரித்து ரூ. 57,880-க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இது முந்தைய கிலோவுக்கு ரூ. 57,554 ஆக இருந்தது.
நாட்டின் முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. தலைநகரான டெல்லியில் 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 350 அதிகரித்து 47, 650 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கம் ரூ. 380 அதிகரித்து ரூ. 51, 980 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை, இந்த மூன்று நகரங்களிலும் ஒரே விலையாக இருக்கிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.200 அதிகரித்து ரூ. 56,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை நிலவரம்:-
தமிழகத்தில் கடந்த வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், நேற்று விலையில் சற்று சரிவு ஏற்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. நேற்று சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 4,802 க்கும், ஒரு சவரன் 38,416 -க்கும்விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.23 அதிகரித்து, ரூ. 4,825 ஆகவும், சவரனுக்கு ரூ.184 அதிகரித்து ரூ.38,600- க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 48,250 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.52,640 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை
இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.63-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.63.20-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.63,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.