scorecardresearch

விலை கூடிய தங்கம்.. ரூ.1000 வரை உயர்ந்த வெள்ளி..!

Gold rates today in Chennai – 06 September 2022

விலை கூடிய தங்கம்.. ரூ.1000 வரை உயர்ந்த வெள்ளி..!
Gold rates today in Chennai – 06 September 2022

சென்னையில், இன்று (செப்.6) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4750 ஆகவும், சவரனுக்கு ரூ.38000 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 24 காரட் 99.99 சதவீத தூயத் தங்கம் கிராம் 5152 ஆகவும், சவரனுக்கு ரூ.41216 ஆகவும் உள்ளது. ஆக தங்கம் நேற்றைய விலையை காட்டிலும் கிராமுக்கு ரூ.14 அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கம் நேற்று கிராம் ரூ.4736 ஆக காணப்பட்டது.

வெள்ளி விலை

செப்.1ஆம் தேதி கிராம் ரூ.58 ஆக சரிந்த வெள்ளி அதன் பின்னர் சீரான இடைவெளியில் உயர்ந்துகொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்றைய விலையை காட்டிலும் இன்று கிராமுக்கு 50 காசுகள் எனவும் கிலோவுக்கு ரூ.500ம் அதிகரித்து காணப்படுகிறது.

தற்போது கிலோ வெள்ளி ரூ.59,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு நாட்களில் வெள்ளி ரூபாய் ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் கிராம் வெள்ளி ரூ.64-ஐ யும் கடந்து விற்பனையானது. அவ்வாறு பார்க்கையில் கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி விலை ரூபாய் 5 ஆயிரம் வரை சரிந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold rates today 06 september 2022 the gold rate in chennai increased by rs 14 per gram today