Advertisment

கிருஷ்ண ஜெயந்தி ஆஃபர்... மீண்டும் அதிரடியாக சரிந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்

இன்று கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு தங்கம் விலை மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today  09 February 2024 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,033-க்கும், ஒரு சவரன் ரூ. 48,264-க்கும் விற்பனையாகியது.

Business, Gold - Silver Rate Today: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், இன்று கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு தங்கம் விலை மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. 

Advertisment

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.44,360-க்கும் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 5,545-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 5,530-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,033-க்கும், ஒரு சவரன் ரூ. 48,264-க்கும் விற்பனையாகியது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு 50 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 78. 50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

 

Gold Rate Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment