இன்று (ஆகஸ்ட்) மாதத்தின் முதல் நாளான்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது (சென்னை தங்கம் விலை நிலவரம் 1 ஆகஸ்ட் 2023).
Gold rates today in Chennai Tamil News: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட்) மாதத்தின் முதல் நாளான்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
Advertisment
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 44,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 5,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,076 ஆகவும், ஒரு சவரன் ரூ. 48,608 ஆகவும் விற்பனையாகிறது.
Advertisment
Advertisements
வெள்ளி விலை
இன்று வெள்ளி விலையும் கிராமுக்கு அதிரடியாக ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil