Gold rates today in tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மாதத்தில் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்ட பாதிப்பு அமெரிக்க டாலர் மதிப்பில் எதிரொலித்துள்ளது. இதனால் பத்திர முதலீடுகளின் அளவு குறைந்து, தங்கம் மீதான முதலீட்டிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
Advertisment
தங்கம் விலை
இந்நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.304 உயர்ந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
இதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,485 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.43,880 ஆகவும் விற்பனையாகிறது. 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5945 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 47560 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை மட்டும் அதிரடியாக கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,800ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil