4வது நாளாக சரிந்த தங்கம் விலை… குஷியில் நகைப் பிரியர்கள்!

சென்னையில் தங்கம் விலை இன்று 4வது நாளாக சரிந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை இன்று 4வது நாளாக சரிந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold Silver Price Today 13 April 2024 CHENNAI in Tamil

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Gold, Silver Prices Today in Chennai Tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது.

Advertisment

திங்கள் கிழமை தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. மறுநாள் செவ்வாய்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது. நேற்று முன்தினம் புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது. இதேபோல், நேற்று வியாழக்கிழமை தங்கம் விலை மீண்டும் அதிரடியாக சரிந்து போனது. சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ. 44,040-க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,505 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை 4வது நாளாக சரிந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ. 43,880-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 5,485-க்கு விற்பனை ஆகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,984-க்கும், ஒரு சவரன் ரூ. 47,872-க்கும் விற்பனையாகியது.

Advertisment
Advertisements

வெள்ளி விலை

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold Rate Business Gold Gold Selling

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: