Advertisment

Today Gold Rate: தங்கத்தை தவிர்க்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்; இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold rates today at Delhi, Chennai, Kolkata, and Mumbai Tamil News: தலைநகர் டெல்லியில், 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.46,950 ஆகவும், 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.ரூ.51, 210 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold rates today, 11 July 2022, Foreign investors avoiding to invest in gold

Gold rates today, 11 July 2022

Gold, Silver Rates Today News Updates in tamil: இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் அதிரடியான ஏற்ற இறக்கங்களை கண்டு வருகின்றன. தங்க முதலீடு செய்யும் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்படுவதற்கு, சர்வதேச சந்தையில் நாணய விலையில் ஏற்படும் மாற்றங்கள், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, வட்டி விகிதங்கள், நகைச் சந்தை, புவியியல் பதட்டங்கள், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணங்கள் உள்ளன. மற்றும் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிக்கலாம் என தெரிவித்ததால் தங்கம் விலை சரிந்து வருகிறது என்று தெரிவிக்கிறார்கள்.

Advertisment

இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை:

இந்நிலையில், இந்தியாவில் இன்றைய தங்கத்தின் விலை 10 கிராம் 22 காரட் தங்கம் ரூ.45,950 ஆகவும், 24 காரட் 10 கிராம் ரூ.51,210 ஆகவும் உள்ளது. தலைநகர் டெல்லியில், 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.46,950 ஆகவும், 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.51, 210 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நிதித் தலைநகரான மும்பையில், 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.46,950 ஆகவும், 24 காரட் 10 கிராம் ரூ.51, 210 ஆகவும் உள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.47,000 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.51,260 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லி, அகமதாபாத் மற்றும் மும்பையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.57.20 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.57,200 -க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை:

தமிழகத்தின் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலையில் அதிரடி குறைவும், அதிரடி உயர்வுமாக நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 9 குறைந்து ரூ.4,680 ஆகவும், சவரனுக்கு ரூ.72 அதிகரித்து ரூ. 37, 440 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 10 கிராம் 22 காரட் தங்கம் விலை ரூ. 90 குறைந்து ரூ.46, 800 ஆகவும், 24 காரட் தங்கம் விலை ரூ.100 குறைந்தும் ரூ.51,050 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளி விலை அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.63-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.63,000 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Gold Rate Business Tamil Business Update Gold Gold Selling Gold Investment Gold Bullion Bonds
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment