Advertisment

Gold Prices Today: ஒரே வாரத்தில் ரூ2000 சரிவு; தங்கம் இன்று என்ன ரேட்?

Gold rates today in Delhi, Chennai, Kolkata, Mumbai - 14 July 2022 Tamil News: மத்திய அரசு இறக்குமதி வரியை உயர்த்திய பின்னர், இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை ரூ.52,300 ஆக இருந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold rates today, 14 July 2022, Gold price falls near 2-month lows in India, down ₹2,000 in a week

Gold rates today, 14 July 2022

Gold Price Today, Gold Price Outlook, Gold Price Forecast in tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதற்கு, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் நிலவி வரும் பணவீக்கம், உக்ரைன் - ரஷ்ய போர் பதற்றம், மத்திய அரசின் தங்க இறக்குமதி மீதான வரி உள்ளிட்டவை முக்கிய காரணமாக உள்ளன. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்சில் தங்க விலை 0.5% குறைந்து, 10 கிராமுக்கு ரூ.50,206 ஆகவும், வெள்ளி எதிர்காலம் 0.24% குறைந்து கிலோவுக்கு ரூ56,331 ஆகவும் இருந்தது. மத்திய அரசு இறக்குமதி வரியை உயர்த்திய பின்னர், இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை ரூ.52,300 ஆக இருந்தது.

Advertisment

உலகளாவிய சந்தைகளில், அமெரிக்கப் பத்திர ஈட்டுத் தொகை மற்றும் உறுதியான அமெரிக்க டாலரின் அதிகரிப்புக்கு மத்தியில், COMEX தங்கம் 0.8% குறைந்து ரூ.1,710 ஆக இருந்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஆக்கிரோஷமான பணவியல் கொள்கையை கடுமையாக்கும் எதிர்பார்ப்புகளின் காரணமாக மற்ற நாணயங்களை வைத்திருக்கும் வாங்குபவர்களுக்கு கிரீன்பேக்-விலை தங்கத்தை கவர்ச்சி அற்றதாக மாற்றியுள்ளது. இதனால், டாலர் மதிப்பு கடந்த 20 ஆண்டுகாலத்தில் இல்லாத அளவிற்கு உயர்ந்து, அதிகபட்சமாக 108.170 என்ற அளவில் உள்ளது.

இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்:-

இந்நிலையில், இந்தியாவில் இன்று (ஜூலை 14, 2022) தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, தலைநகர் டெல்லியில், 10 கிராம் 22 காரட் தங்கம் விலை ரூ.46,900 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கம் விலை ரூ.50,160 ஆகவும் உள்ளது. மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களிலும் இதே விலையில் தான் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, இந்த மூன்று நகரங்களிலும் ஒரே விலையாக இருக்கிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி ரூ. 57,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

publive-image

சென்னையில் தங்கம் விலை:-

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்றம் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று சென்னையில், 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து, ரூ. 4,660 ஆகவும், சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.37,280 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.16 அதிகரித்து, ரூ. 4,676 ஆகவும், சவரனுக்கு ரூ. 128 அதிகரித்து, ரூ.37, 408-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.46,760 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 51,010 ஆகவும் உள்ளது.

publive-image

வெள்ளி விலை:-

சென்னையில் நேற்று வெள்ளி கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.61.70 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவுக்கு ரூ.800 குறைந்து ரூ.61,700க்கு விற்பனையாகியது.

இந்த நிலையில். இன்று வெள்ளி விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.62.30 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.62, 300-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Gold Rate Business Tamil Business Update Gold Gold Selling Gold Investment Gold Bullion Bonds
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment