Gold prices fall by Rs 760 to Rs. 37,920. Gold is trading at Rs. 95 is selling for less than Rs.4740: உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெப்பு உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளன. இந்த விவகாரத்தில் நடுநிலையில் இருந்து வரும் இந்தியா பொருளாதாரத்தில் சற்று பின்னடைவை சந்தித்து வருகிறது.
Advertisment
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கி ரெபோ வட்டியை உயர்த்தியுள்ளது. வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ரெபோ வட்டியை உயர்த்துவதன் மூலம் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இந்த திட்டத்தால் எந்த அளவிற்கு அரசு நன்மை பெற உள்ளதோ அதே அளவிற்கு சிக்கல்களை சந்திக்க இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுஒருபுறமிருக்க, சமீப காலமாக தங்கத்தின் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென ஏறி இறங்கி வருகிறது. இதற்கு உக்ரைன் மீதான ரஷ்ய படைப்பு தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்துள்ளது.
நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4835 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து, ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.95 குறைந்து, ரூ.4740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் வெள்ளி கிராம் ரூ.1.30 குறைந்து ரூ.66.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.13.00 உயர்ந்து ரூ.66,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil